Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
     நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (33). கார் ஓட்டுநர். இவர் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் சென்ற போது சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் (26) என்பவர் காரை தடுத்து நிறுத்தி சுரேஷிடம் பணம் கேட்டு மிரட்டினார். மேலும் அவரை அரிவாளால் வெட்ட முயன்றார்.
    இது குறித்த புகாரின்பேரில் சுசீந்திரம் காவல் நிலையத்தினர், பழனிகுமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பழனிகுமார் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில், தெங்கம்புதூரைச் சேர்ந்த சந்திரமோகன், மதுக்கூட ஊழியர் ஸ்ரீராமன் ஆகியோரை கொலை செய்த வழக்கு, முகிலன்விளையைச் சேர்ந்த சுரேஷ் கொலை வழக்கு, கோட்டாறு டேவிட் என்பவரை கொலை செய்த வழக்கு, தக்கலை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளனவாம்.  இதையடுத்து, பழனிகுமாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார், அதன்பேரில் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண், பழனிகுமாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai