Enable Javscript for better performance
குமரியில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    குமரியில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 15th October 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
     கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ மழைக்காலங்களிலும் மழை பெய்யும். நிகழாண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் இல்லை. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் சரியத் தொடங்கியது. பாசன குளங்களிலும் நீர் வற்றியது. வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
     வடகிழக்கு பருவ மழை பெய்தால்தான் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை வந்தது. இம் மாவட்டத்தில் வழக்கமாக செப்.15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் நிகழாண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர்  மாதம் தொடங்கியும் மழை பொழிவு இல்லாததால் வறட்சியின் பிடியில் குமரி மாவட்டம் சிக்கியது.
     இந்நிலையில் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. பூதப்பாண்டி, சுருளோடு, புத்தன்அணை பகுதிகளில் அதிகமான மழை பெய்தது.  மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்ததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  நாகர்கோவில் நகரில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக  பெருஞ்சாணி அணையில் 61.2 மி.மீ மழை பெய்தது.
     பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 15.55 அடியாக உள்ளது, அணைக்கு விநாடிக்கு 403 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 643 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 12.50 அடியாக உள்ளது, அணைக்கு 92 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai