Enable Javscript for better performance
குமரியில் வறட்சியால் ஒடிந்து விழும் வாழைகள்: பெரும் இழப்பில் விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    குமரியில் வறட்சியால் ஒடிந்து விழும் வாழைகள்: பெரும் இழப்பில் விவசாயிகள்  

    By DIN  |   Published on : 15th October 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக வாழை, தென்னை விவசாயிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
     குமரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக மழை பெய்யாத நிலையில் தண்ணீரின்றி வாழை, தென்னை, ரப்பர் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் கருகி வருகின்றன. இதில் குறிப்பாக தண்ணீர் பாய்ச்சுவதற்கு வாய்ப்புகள் இல்லாத இடங்களில் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் முற்றிலும் கருகி வருகின்றன.
    ஒடிந்து சாய்ந்த குலைதள்ளிய வாழைகள்: மாவட்டத்தில் வறட்சி காரணமாக பல்வேறு இடங்களில் குலைதள்ளிய வாழைகள் ஒடிந்து விழுந்துள்ள பரிதாப நிலையைக் காணமுடிகிறது. இதில் குறிப்பாக அருமனைப் பகுதிகளான தெற்றிவிளை, குரூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குலை தள்ளிய வாழைகள் தண்ணீரின்றி ஒடிந்து விழுந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
     இதுகுறித்து தெற்றிவிளையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியது: மழை பொய்த்துப் போனதால் கரையோரப் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட வாழைகள் அனைத்தும் ஒடிந்து விழுந்துள்ளன. இதில் குறிப்பாக குலை தள்ளிய வாழைகள் ஒடிந்து விழுந்துள்ளன.  வாழைகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சவும் போதிய வாய்ப்புகளும் அதற்குரிய பொருளாதாரமும் விவசாயிகள் மத்தியில் இல்லாத நிலையில் இந்த  இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai