Enable Javscript for better performance
குலசேகரம்-திற்பரப்பு சாலை சீரமைப்புப் பணி- Dinamani

சுடச்சுட

    

    ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு மாநில நெடுஞ்சாலையில் குலசேகரம் அருகே  உண்ணியூர்கோணம் முதல் திற்பரப்பு காஞ்சிரமூடு வரையிலான பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில் இடைப்பட்ட பகுதிகளிலும் சீரமைப்பு நடத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு மாநில நெடுஞ்சாலையில் மிகவும் சேதமடைந்து காணப்படும் 15 கி.மீ. தொலைவுப் பகுதிகளில் ரூ. 8 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் முதல் திற்பரப்பு காஞ்சிரமூடு இசக்கியம்மன் கோயில் வரையிலான 3.4. கி.மீ. தொலைவுப் பகுதியை சீரமைக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பணிகளைத் தொடர்ந்து  இதே சாலையில் 44 ஆவது கி.மீ. இல் இருந்து 45 ஆவது கி.மீ. வரையிலான அரகநாடு பப்புக்காலை பகுதியும் சீரமைக்கப்படவுள்ளது. இப்பணிகள் செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.
    இடைப்பட்ட பகுதி:  இச்சாலையில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பகுதிகளான குலசேகரம் அரசமூடு முதல் உண்ணியூர்கோணம் வரையிலான பகுதிகளையும் மற்றும் திற்பரப்பு சந்திப்பு பகுதியையும் திட்டத்தில் சேர்க்காமல் விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே இப்பணிகளுடன் இணைத்து சீரமைக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai