Enable Javscript for better performance
நவராத்திரி பூஜைக்கு சென்று திரும்பிய சுவாமி சிலைகள்: களியக்காவிளையில் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நவராத்திரி பூஜைக்கு சென்று திரும்பிய சுவாமி சிலைகள்: களியக்காவிளையில் வரவேற்பு

    By DIN  |   Published on : 15th October 2016 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜைக்கு சென்று குமரி மாவட்டத்துக்கு திரும்பிய சுவாமி சிலைகளுக்கு, மாவட்ட எல்லையான களியக்காவிளையில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
     திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்திலிருந்து சரஸ்வதி அம்மன் சிலையும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் குமாரகோவில் குமாரசுவாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூஜையில் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்ற பின் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரும் வழக்கம் மன்னர் ஆட்சி காலம் முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.
     இந்நிலையில் கம்பர் பூஜித்ததாகக் கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மனை யானை மீதும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமியை பல்லக்கிலும் பத்மநாபபுரத்திலிருந்து செப். 29 ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு பவனியாக கொண்டு செல்லப்பட்டது. சுவாமி சிலைகளுக்கு முன்னால், மன்னர் பயன்படுத்திய உடைவாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
    இதைத் தொடர்ந்து செப். 30 ஆம் தேதி களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் சுவாமி சிலைகளுக்கு துப்பாக்கிய ஏந்திய கேரள போலீஸாரின் அணிவகுப்புடன், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டது.
     இதைத் தொடர்ந்து நவராத்திரி பூஜைகள் நிறைவுபெற்றதையடுத்து அங்கிருந்து வியாழக்கிழமை திரும்பிய சுவாமி சிலைகள், அன்றிரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலில் இரவு தங்கலுக்குப் பின் வெள்ளிக்கிழமை அங்கிருந்து திரும்பின. வழிநெடுகிலும் பக்தர்கள் தட்டுபூஜை நடத்தி சுவாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 3.10 மணியளவில் சுவாமி சிலைகள் களியக்காவிளைக்கு வந்தன. கேரள போலீஸார் மற்றும் ஏராளமான பக்தர்கள் உடன் வந்தனர்.
    தொடர்ந்து ஊர்வல பொறுப்பை கேரள அதிகாரிகள், கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் ப. பாரதியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை குழித்துறை மகாதேவர் கோயிலில் இரவு தங்கலுக்குப் பின் சுவாமி சிலைகள் சனிக்கிழமை பத்மநாபபுரம் சென்று அங்கிருந்து முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரம் கோயிலுக்கும், குமாரசுவாமி வேளிமலை கோயிலுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai