Enable Javscript for better performance
பருவமழை முன்னெச்சரிக்கை ஒருங்கிணைப்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை தொடர்பான தொண்டு நிறுவன ஒருங்கிணைப்புக் கூட்டம் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு,  மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமை வகித்து பேசியது;அவசர காலங்களில் தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் வடகிழக்கு பருவ மழையின் போது உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மற்றும்  குமரி மாவட்டத்தில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட தாழ்வான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
     மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே பாதுகாப்பான தங்குமிடம் கண்டறியப்பட்டு தேவையான  உணவு பொருள்கள், அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், போன்ற பொருள்கள் நியாய விலை கடைகளில் தயார் நிலையில் இருப்பில் உள்ளன. மேலும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு எண் 1077 ஐ ஊராட்சி அலுவலகம், கிராம அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் விளம்பர படுத்த வேண்டும்.
     விளவங்கோடு வட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை சேர்ந்த நீர் நிலை மூலம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரின் பணி மிக முக்கியமானது என்றார் அவர்.
     மாவட்ட அளவில் தொண்டு நிறுவனங்களுக்கு என வாட்ஸ்அப் குழு அமைத்து அவசரகாலங்களில் தகவல் பரிமாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் எனவும் தொண்டு நிறுவனத்தினருக்கு மாவட்ட அளவில் பேரிடர் குறித்த பயிற்சி வழங்குதல், முன்று மாதத்திற்கு ஒரு முறை இக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் தொண்டு நிறுவனங்கள் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
    இக்கூட்டத்தில் 30 தொண்டு நிறவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கோட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், வட்டாட்சியர்கள் மூர்த்தி, ஆறுமுகநயினார், மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்  சுரேஷ் குமார்,  அருள்கண்ணன், மாவட்ட திட்ட அலுவலர் டேவிட்சன், நேரு இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தினேஷ், செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளர் ஜெஸிரோச்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் விஜிலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai