Enable Javscript for better performance
பார்வதிபுரத்தில் பேருந்து - சுமை ஆட்டோ மோதலால் மின்கம்பம் சாய்ந்தது- Dinamani

சுடச்சுட

    

    பார்வதிபுரத்தில் பேருந்து - சுமை ஆட்டோ மோதலால் மின்கம்பம் சாய்ந்தது

    By DIN  |   Published on : 15th October 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பார்வதிபுரத்தில், சுமைஆட்டோ மீது பேருந்து மோதியதில் சுமை ஆட்டோ மின்கம்பத்தில் மோதி சாய்ந்தது.
     கொல்வேல் பகுதியைச் சேர்ந்தவர் வர்கீஸ். இவர் முளகுமூட்டிலுள்ள நாஞ்சில் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருள்களை அந்நிறுவனத்துக்குச் சொந்தமான  சுமை ஆட்டோவில்  எடுத்துச் சென்று கடைகளில் விநியோகித்து வருகிறார். வர்கீஸ்  வெள்ளிக்கிழமை  நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்தில் பெருவிளை சந்திப்பு அருகே சாலையோரத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகிலிருந்த பேக்கரியில் பொருள்களை கொடுக்கச் சென்றாராம்.
     அப்போது பார்வதிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சுமை ஆட்டோ மீது மோதியது. இதில் சுமை ஆட்டோ  மின் கம்பத்தில் மோதியதில், மின் கம்பம் முறிந்து விழுந்தது.  இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
     இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், போக்குவரத்தை சீர் செய்ததோடு மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் பேருந்தை அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டு, மின் கம்பத்தில் மோதிய வாகனத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai