Enable Javscript for better performance
புதுக்கடை - தக்கலை அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கடை - தக்கலை அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்டை -தக்கலை இடையே அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     புதுக்டையிலிருந்து கிள்ளியூர், தொலையாவட்டம்,கருங்கல், செல்லங்கோணம், பூக்கடை, கோழிப்போர்விளை, திருவிதாங்கோடு வழியாக தக்கலைக்கு வழித்தடம் 10 சி என்ற அரசுப் பேருந்து சுமார் 30 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இதனால் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,அலுவலகப்பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகவும் பயன்பெற்று வந்தனர்.
     குறிப்பாக திருவிதாங்கோடு,தக்கலை,பூக்கடை ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் கல்லூரிகளுக்கு செல்ல மாணவர்களுக்கு இந்த பேருந்து மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் திடீரென கடந்த ஒருவாரமாக இந்தப் பேருந்து இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் மகவும் அவதியடைந்துள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை உடனடியாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai