Enable Javscript for better performance
பூதப்பாண்டி வட்டாரத்தில்  நடமாடும் மண் பரிசோதனை நிலைய ஊர்தி- Dinamani

சுடச்சுட

    

    பூதப்பாண்டி வட்டாரத்தில்  நடமாடும் மண் பரிசோதனை நிலைய ஊர்தி

    By DIN  |   Published on : 15th October 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பூதப்பாண்டி வட்டாரத்தில், அக். 17 ஆம் தேதி முதல்  நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி  மண் ஆய்வு பணியை மேற்கொள்கிறது.
    இதுகுறித்து, இராஜாக்கமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நடமாடும் மண் பரிசோதனை நிலைய ஆய்வு ஊர்தி பூதப்பாண்டி வட்டாரத்தில் அக்.17 ஆம் தேதி கடுக்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலும், 19  ஆம் தேதி திட்டுவிளை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலும், 20 ஆம் தேதி  செண்பகராமன்புதூர் ஊராட்சி அலுவலகத்திலும், 21 ஆம் தேதி திருப்பதிசாரத்திலும் கிராம நிர்வாக பயணம் மேற்கொள்ளப்பட்டு மண்ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மண்மாதிரிகளை நடமாடும் மண்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து உடனடியாக மண்மாதிரி முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai