Enable Javscript for better performance
விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மார்த்தாண்டம் அருகே விபத்தில் காயமடைந்த முதியவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
     மார்த்தாண்டம் அருகேயுள்ள கழுவன்திட்டை, வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்குட்டி (74). இவர் கடந்த 11 ஆம் தேதி மார்த்தாண்டத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்தார். வட்டவிளை சந்திப்பில் பேருந்திலிருந்து இறங்கியபோது அவர் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai