நாகர்கோவில் பார்வதிபுரத்தில் 2 வீடுகளில் நகை, பணத்தைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பார்வதிபுரம் சாரதாநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(27). தனியார் நிறுவன ஊழியர். இவர் செவ்வாய்க்கிழமை தனது நண்பரின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு சென்றுவிட்டு புதன்கிழமை காலை வீட்டுக்கு திரும்பினாராம். அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில், வடசேரி போலீஸார் வந்து விசாரித்தனர். அதில், அவரது வீட்டு மாடியில் குடியிருக்கும் சிவகுமார் என்பவரது வீட்டிலும் திருட்டு நிகழ்ந்தது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதிவுகள் சேகரிக்கப்பட்டதுடன், மோப்ப நாயும் சோதனைக்கு விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.