மார்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கியதாக இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெய்யூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த டேவிட் மகன் கர்னல்ராஜ் (69). இவரது மனைவியின் சொந்த ஊர் மார்த்தாண்டம் அருகேயுள்ள சிராயன்குழி. இங்கு இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளதாம். இந்த நிலம் தொடர்பாக அவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் தனது மனைவியின் பெற்றோர் நினைவு தினத்தையொட்டி சிராயன்குழி பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டத்துக்கு நினைவஞ்சலி செலுத்த கர்னல்ராஜ், அவரது மனைவி மற்றும் மனைவியின் தங்கை ஆகியோர் திங்கள்கிழமை வந்தனராம். அப்போது சிராயன்குழி வாழவிலை பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஜெகன் (32) இருவரையும் தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் பேசி தாக்கினாராம்.
இதுகுறித்து கர்னல்ராஜ் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவான ஜெகனை தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.