தோவாளையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
நாகர்கோவில்- ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே குறுகலாக இருந்த பாலத்தின் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக சாலையின் இருபுறமும் ஜல்லி, மண் கொட்டப்பட்டிருந்தன. வாகனங்கள் செல்வதற்கு அருகிலேயே அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த கார் எதிர்பாராமல் அணுகு சாலையை விட்டு விலகி ஜல்லி, மண் குவிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் பேச்சிமுத்து (26) ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.