நாகர்கோவிலை அடுத்த வெள்ளமோடில் கிரீன் அக்ரி கிளப் மாதாந்திர மண்டல கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு வேளாண் அறிஞர் ராஜகுமார் தலைமை வகித்தார். இதில், வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீட தலைவர் சைதன்யானந்தஜி மஹராஜ் கலந்துகொண்டு பேசியது: பஞ்சபூதங்களால் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே பஞ்சபூதங்களால் ஆனதே மனித உடல். பஞ்சபூத செயல்பாடு நமது உடலிலும் உள்ளது. பஞ்சபூதங்களால் ஆன நமது உடல் முடிவில் சேர்வதும் பஞ்சபூதங்களில்தான். இயற்கையில் பயிர்கள் செழித்து வளர பஞ்சபூதங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே போல பஞ்சபூதங்களின் ஒத்துழைப்பின்றி உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. இயற்கையை வெல்வதற்கு மனிதனால் முடியாது என்றார் அவர்.
மண்டலத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். கீதா உறுதிமொழி வாசித்தார். நடராஜன் வரவேற்றார். அக்ரி கிளப் செயலர் பத்மதாஸ் கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில், வருங்கால திட்டங்கள் குறித்தும், அக்ரி கிளப் உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அக்ரி கிளப் பொருளாளர் தேவதாஸ், அமைப்பாளர் அருள்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை வெள்ளமோடி பூமிபாதுகாப்பு சங்கத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.