புலவர்விளை கோயிலில் 21இல் சமபந்தி அன்னதானம்

நாகர்கோவில் புலவர்விளை ஸ்ரீமன் நாராயணசுவாமி பதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) சமபந்தி அன்னதானம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

நாகர்கோவில் புலவர்விளை ஸ்ரீமன் நாராயணசுவாமி பதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) சமபந்தி அன்னதானம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி பக்தர்களால் வழங்கப்படும் சமபந்தி அன்னதானம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், 6 மணிக்கு விழா கமிட்டி கூட்டம், இரவு 7 மணிக்கு பணிவிடை, 7.30 மணிக்கு உம்பாம் படைத்தல், 7.45 மணிக்கு உகப்படிப்பு, மாப்பு கேட்டல், சந்தன பதம் வழங்கி நெற்றியில் திருநாமம் இடுதல், 8 மணிக்கு சமபந்தி அன்னதானம், 8.30 மணிக்கு பக்தர்களுக்கு இனிமம் வழங்குதல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஏ. ராமச்சந்திரன், ஏ. சந்திரகுமார், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com