அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வெளி ஆள்களை வைத்து ரப்பர் பால் வடிப்பு செய்வதைக் கண்டித்து நாகர்கோவில் அரசு ரப்பர் கழக இயக்குநர் அலுவலகம் முன் குமரி மாவட்ட அரசு
Published on
Updated on
1 min read

வெளி ஆள்களை வைத்து ரப்பர் பால் வடிப்பு செய்வதைக் கண்டித்து நாகர்கோவில் அரசு ரப்பர் கழக இயக்குநர் அலுவலகம் முன் குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் முன்னேற்ற சங்க கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் முன்னேற்ற சங்க கூட்டமைப்பு பொதுச் செயலர் விஜயன் தலைமை வகித்துப் பேசினார்.  குழு என்ற பெயரில் வெளி ஆள்களை வைத்து ரப்பர் பால் வடிப்பு தொழிலை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.  இங்கு சுமார் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள தொழிலாளர்கள் உள்ளனர்.  எனவே வெளி ஆள்களை கொண்டு பால் வடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தற்போது நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ. 430 மட்டுமே வழங்கி வருகின்றனர். கூலியாக ஒரு நபருக்கு ரூ. 590 வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவையும் ரப்பர் கழகம் நிறைவேற்றவில்லை.  
பிற மாநிலங்களில் மாதம் ஒரு நபருக்கு ரூ. 18 ஆயிரம் ஊதியம் வழங்க அனுமதித்துள்ளனர். அதே போல் குமரி மாவட்டத்திலும் ரப்பர் தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டும்.  தாற்காலிக தொழிலாளர்களாக  பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ரப்பர் தொழிலாளர்கள்
கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com