குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் மிதமான அளவில் உயர்ந்து வருகிறது. ஆறுகளிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக சாரல் மழை பெய்த போதும், சிற்றாறு 1இல் அதிகபட்சமாக 44 மி.மீ. மழை பதிவானது. சிற்றாறு 2இல் 27.4 மி.மீ., பாலமோரில் 24.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
வியாழக்கிழமை காலைமுதல் மாவட்டம் முழுவதும் கரும் மேகம் சூழ்ந்த நிலையில் காணப்பட்டது. நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களில் காலையில் பலத்த மழை பெய்தது. அணைப்பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கன்னிப்பூ பருவத்தில் பொடி விதைப்பு மற்றும் நாற்று மூலம் நடவு செய்த நெற்பயிர்கள் தப்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கரையோரப் பகுதிகளில் தென்னை, வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களும் வறட்சியின் பிடியிலிருந்து மீண்டுள்ளன. வறண்டு கிடந்த கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.