சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்விநிலையங்களில் 1ஆம் வகுப்புமுதல் பி.எச்.டி. வரை பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர், மாணவிகளுக்கு 2017-18ஆம் கல்வி ஆண்டுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (புதியது மற்றும் புதுப்பித்தல்) பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரம்பு 30.08.2017இல் இருந்து 30.09.2017வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே விண்ணப்பிக்காத சிறுபான்மையின மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற இக்கால நீட்டிப்பின் அடிப்படையில் விண்ணப்பித்து பயனடையலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.