செயலற்ற முறையில் இருக்கும் தோவாளை ஊராட்சியைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. ஊராட்சி செயலர் திரவியம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் திலகர் வரவேற்றார்.
தோவாளை ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாவட்ட பொதுச்செயலர் மணிசாமி, மாவட்டச் செயலர் ஜெயராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாதேவன், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் நீலேஷ் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி, தெரு விளக்குகள் எறியாததைக் கண்டிக்கும் விதத்தில் பெட்ரமாக்ஸ் விளக்கை எரிய வைத்து ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
மாவட்ட இளைஞர் அணி பார்வையாளர் பத்பநாபன், ஒன்றிய பொதுச் செயலர் மகாதேவன், ரஜினிகாந்த், ஒன்றியச் செயலர் தாமரைகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய இளைஞரணிச் செயலர் விக்னேஷ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.