குமரி மாவட்டத்தில் மானியத்துடன் சூரிய சக்தி பம்பு செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 5 முதல் 10 வரை குதிரைத்திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள், விவசாயிகளுக்கு, 90 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், ஏற்கெனவே இலவச விவசாய மின் இணைப்பு பெற்றிருந்தால், சூரிய சக்தி பம்புசெட் கிடைக்கும் நிலையில், இலவச மின் இணைப்பை துண்டிப்பதற்கு இசைவு வழங்க வேண்டும்.
இலவச மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளவர்கள், சூரிய சக்தி பம்புசெட் கிடைக்கும் நிலையில் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கு இசைவு வழங்க வேண்டும்.
மேலும் இலவச மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பம் செய்த போது மின்வாரியத்தால் வழங்கப்பட்ட ரசீதின் நகலையும் இணைக்க வேண்டும்.
இத்திட்டத்தில் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறு ஆகியவற்றில் 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்புசெட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மைப் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள் தங்கள் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து சூரிய சக்தி பம்புசெட் அமைத்துக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து விண்ணப்பத்தை பெற்று, விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2, ஆதார் அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல், புல வரைபட நகல் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
வேளாண்மை பொறியியல் துறையின் அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்றவுடன் விவசாயிகள் தேர்வு செய்த பம்புசெட்டின் விலையில் 10 சதவீத தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் கேட்பு வரைவோலை மூலமாக வேளாண்மை பொறியியல் துறையில் வழங்க வேண்டும்.
பம்புசெட் பொருத்திய பின்னர் அதன் செயல்பாட்டை உறுதி செய்து, அதன் பிறகு மானியத்தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
இதுதொடர்பாக விவசாயிகள் அணுக வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்: உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, 833 தொழிற்பேட்டை, கோணம், நாகர்கோவில், 629004, தொலைபேசி எண் 04652 - 260181. உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, மேட்டுக்கடை, பள்ளிவாசல் சமீபம், தக்கலை, 629175, தொலைபேசி எண் 04651.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.