ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆய்வுப் பணி நடைபெற்றது.
இப்பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் கழிவு பொருள்களில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின்படி, மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என தனியாக பிரித்து வாங்குவது குறித்து ஆய்வுப் பணி 18 வார்டுகளிலும் நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி, சிறப்பு பார்வையாளரான கடம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று திடக் கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.