நாகர்கோவில் அருகே மர்மக் காய்ச்சலுக்கு பள்ளி சிறுவன் உயிரிழந்தான்.
நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. தம்பதியின் மகன் சஜித் (5). அப்பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவன், நாகர்கோவில் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அங்கு அந்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.