அண்ணாவின் 108ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நாகர்கோவிலில் சைக்கிள் பந்தயம் சனிக்கிழமை (செப்.9) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணாவின் 108ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதன்கிழமை நடைபெறவிருந்த அண்ணா சைக்கிள் பந்தயம், மழை காரணமாக சனிக்கிழமை (செப்.9) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு பரிசும், 4 முதல் 10ஆவது இடம்வரை பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டி மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. 13 வயதுக்குள்பட்டோருக்கு 15 கி.மீ.(மாணவர்கள்), 10 கி.மீ.(மாணவிகள்) தொலைவும், 15 வயதுக்குள்பட்டோருக்கு 20 கி.மீ.(மாணவர்கள்), 15 கி.மீ. (மாணவிகள்) தொலைவும், 17 வயதுக்குள்பட்டோருக்கு 20 கி.மீ (மாணவர்கள்), 15 கி.மீ(மாணவிகள்) தொலைவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர், மாணவிகள் தாங்களே சைக்கிள் கொண்டுவர வேண்டும். இரண்டு பிரேக்குகளுடன் அகலமான கியர் பொருத்தப்பட்ட சைக்கிள்களை பயன்படுத்தக்கூடாது. சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிளாக இருத்தல் வேண்டும். மாணவர், மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வயதுச் சான்று பெற்று, போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.