வாறுதட்டு கிருஷ்ணசுவாமி கோயில் விழா நாளை தொடக்கம்
By DIN | Published on : 05th February 2017 03:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு சதானந்த நகர் அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயிலில் 81 ஆவது ஆண்டு பட்டாபிஷேக திருவிழா திங்கள்கிழமை (பிப். 6) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோம், சுதர்ஸன ஹோமம், சிறப்பு பூஜை, அன்னதானம், திருவிளக்கு பூஜை, சமய மாநாடு உள்ளிட்டவை நடைபெறும். முதல்நாள் காலை 9.30 மணிக்கு கோயில் தந்திரி கொடுங்ஙல்லூர் சதீசன் முன்னிலையில் ஆலய மேல்சாந்தி சுந்தர் திருக்கொடியேற்றுகிறார். மாலை 6 மணிக்கு சுகிர்தா தங்கசுவாமி, சிந்து சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் 508 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறும். 5 ஆம் நாள் விழாவில் இரவு 9.30 மணிக்கு சிந்து தலைமையில் மகளிர் மாநாடு நடைபெறும். 7 ஆம் நாள் விழாவில் (பிப். 12) காலை 8 மணிக்கு சமய வகுப்பு ஆண்டு விழா போட்டிகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு சமூக நாடகம் நடைபெறும். 8 ஆம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு மணக்காலை குமரபுரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது. 9 ஆம் நாள் விழாவில் பிற்பகல் 1.30 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.
இந்த பவனி கோயிலில் இருந்து தொடங்கி தையாலுமூடு, மரியகிரி, களியக்காவிளை, படந்தாலுமூடு, அதங்கோடு, மணக்காலை வழியாக கோயிலை வந்தடைகிறது. 10 ஆம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு பொங்கல் வழிபாடும், தொடர்ந்து அபிஷேக உறியடியும் நடைபெறுகிறது.