இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து புதுதில்லிக்கு நடைபெறும் விழிப்புணர்வு பிரசாரப் பயணத்துக்கு களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மனிதனுக்கு இயற்கை விவசாயம், இயற்கை உணவு, இயற்கை மருந்து என இயற்கையோடு கூடிய வாழ்க்கை முறை அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இயற்கையை பாதுகாக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பிரசாரப் பயணம் நடைபெறுகிறது.
கன்னியாகுமரியில் புதன்கிழமை தொடங்கும் இப்பிரசார யாத்திரைக்கு படந்தாலுமூடு கிரேஸ் கல்லூரி வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. கல்லூரி முதல்வர் கீதா பான்ஸ் தலைமை வகிக்கிறார். "இயற்கையை பாதுகாப்போம் (பிரக்ருதி சுரக்ஷா)' அமைப்பின் செயலர் ஜெயராம் வரவேற்கிறார். கேரள மாநிலம், பாறசாலை எம்.எல்.ஏ. சி.கே. ஹரீந்திரன், நெய்யாற்றின்கரை எம்.எல்.ஏ. கே. ஆன்சலம் ஆகியோர் பேசுகின்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருண் நன்றி கூறுகிறார். இந்த விழிப்புணர்வு யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக செப். 7ஆம் தேதி புது தில்லி, கரோல்பாக் பகுதியில் நிறைவடைகிறது.