முளகுமூடு நாஞ்சில் பால் நிர்வாகம் சமையல் கலைஞர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி, தாழாக்குடி மகளிர் சுய உதவிக் குழுக் கட்டடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நாஞ்சில் பால் பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குநர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமை வகித்து பேசினார். ஆன்ட்ரூஸ் முன்னிலை வகித்தார். தாழாக்குடி நாஞ்சில் பால் விற்பனை முகவர் கணேசன் ஒருங்கிணைப்பில், நாஞ்சில் பால் மற்றும் பால் பொருள்களின் தரம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில், நிலைய உதவி பொது மேலாளர் ரெஜித்சிங், விற்பனை மேலாளர் ஜோஸ், சந்தைப் படுத்தும் மேலாளர் மோரிஸ் அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.