வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர் மயங்கி விழுந்து சாவு

களியக்காவிளை அருகே மருதங்கோடு ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட பெண்  பயனாளி பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Published on
Updated on
1 min read

களியக்காவிளை அருகே மருதங்கோடு ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட பெண்  பயனாளி பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மருதங்கோடு ஊராட்சி சூழிக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் புஸ்பாங்கதன் மனைவி விஜயகுமாரி (58). இவர் இந்த ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பணியின் போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.