குலசேகரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
குலசேகரம் திருநந்திக்கரை அருகே திட்டவிளையைச் சேர்ந்தவர் வேலப்பன். இவர், வியாழக்கிழமை மழை காரணமாக வீட்டு மாடியில் தேங்கி நின்ற தண்ணீரை அகற்றிக் கொண்டிருந்தாராம். அப்போது மின்கம்பத்திலிருந்து வீட்டுக்கு வரும் மின்கம்பியிலிருந்து மின்சாரம் கசிந்து, தண்ணீரில் பாய்ந்ததால், வேலப்பன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த வேலப்பனுக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.