அதிமுக முன்னாள் எம்எல்ஏ திடீர் போராட்டம்

மது விற்றதாக போலீஸார் பொய் வழக்கு தொடர்ந்ததாகக் கூறி,  முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மது விற்றதாக போலீஸார் பொய் வழக்கு தொடர்ந்ததாகக் கூறி,  முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான அவர், தனக்குச் சொந்தமான இடத்தை அரசு டாஸ்மாக் கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள்  உள்ளன.
இந்நிலையில், ஒழுகினசேரி பகுதியில் நாஞ்சில் முருகேசன் சனிக்கிழமை அனுமதியின்றி மது விற்றதாக வடசேரி போலீஸார்  வழக்குப் பதிவு செய்தனராம். இதற்கு நாஞ்சில் முருகேசன் கண்டனம் தெரிவித்து,  தனக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை முன்பு ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.  மேலும் கடையை திறக்கவிடாமல் பூட்டு போட்டார்.
இது குறித்து தகவலறிந்த வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மோகன அய்யர், அனில்குமார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள், நாஞ்சில் முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர் கூறியது:  மதுபான பாட்டில்களை போலீஸாரே இங்கு கொண்டு வந்து வைத்து என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விடியோ காட்சிகள் ஆதாரமாக என்னிடம் உள்ளது. அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலையால் என்னைப் போன்ற தொண்டர்கள் ஒதுங்கியிருக்கிறோம். இது போன்று தொந்தரவு செய்தால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
பின்னர் அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com