Enable Javscript for better performance
அருமனை அருகே தீக்குளித்த பெண்சாவு- Dinamani

சுடச்சுட

    

    அருமனை அருகே தீக்குளித்து பலத்த காயமடைந்த பெண் இறந்தார்.
    இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி விஜிலா குமாரி (29). இத்தம்பதியினருக்கு 2  குழந்தைகள் உள்ளனர். குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இதனை விஜிலா குமாரி கண்டித்துள்ளார். 
    இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், விஜிலா குமாரி தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜிலா குமாரி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தார்.
    அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai