Enable Javscript for better performance
கடையாலுமூடு, ராஜாக்கமங்கலத்தில் சாலை விபத்தில் 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கடையாலுமூடு, ராஜாக்கமங்கலத்தில் சாலை விபத்தில் 2 பேர் சாவு

    By DIN  |   Published on : 09th February 2018 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையாலுமூடு, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
    பேச்சிப்பாறையை அடுத்துள்ள பாலாலி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் வேதமணி(65). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான இவர், புதன்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் பாலாலி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பன்றி குறுக்கே பாய்ந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க அவர் மோட்டார் சைக்கிளை சாலையோரம் திருப்பியுள்ளார். இதில் நிலை தடுமாறிய அவர் பைக் சரிந்து விபத்துக்குள்ளானார். பலத்த காயம் அடைந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கடையாலுமூடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த தாமஸ் மகன் பிளசன் (20). இவர் மோட்டார் சைக்கிளில் ராஜாக்கமங்கலம் அருகே தெக்குறிச்சி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பொக்லைன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.  இதில் பிளசன் காயமடைந்தார். ஆசாரிப்பள்ளம்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai