Enable Javscript for better performance
குமரியில் தேன் உற்பத்திக்கு ஆயத்தமாகும் தேனீ வளர்ப்பாளர்கள்: நிகழாண்டு நல்ல சீசன் அமையும் என எதிர்பா- Dinamani

சுடச்சுட

    

    குமரியில் தேன் உற்பத்திக்கு ஆயத்தமாகும் தேனீ வளர்ப்பாளர்கள்: நிகழாண்டு நல்ல சீசன் அமையும் என எதிர்பார்ப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் நிகழாண்டு தேன் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகளில் தேனீ வளர்ப்போர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
    தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தேன் உற்பத்திக்கு உகந்த மாவட்டமாகும். அடர்ந்த வனங்களும், ரப்பர் காடுகளும் கொண்ட இம்மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வனங்களில் மரங்களில், மலை இடுக்குகளில் தேனீக்கள் கட்டும் கூடுகளிலிருந்து தேன் எடுக்கின்றனர். இந்த வகை தேன் மலைத்தூக்கன் தேன் எனப்படுகிறது. இது தவிர தொழில் முறையில் தேனீ வளர்ப்போர் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கானோர் செயற்கை முறையில் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.
    ஆங்கிலேயே மிஷனெரிகள் கற்றுக் கொடுத்த தொழில்: குமரியில் செயற்கை முறையில் காடுகளில், தேனீ கூடுகள் அமைத்து அவற்றில் தேனீ குடும்பங்களை வளர்த்து அதன் மூலம் தேன் உற்பத்தி செய்யும் கலையை குமரி மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர்கள் ஆங்கிலேய மிஷனரிகள் ஆவர். 1950 ஆம் ஆண்டு வாக்கில் ஆங்கிலேயே மிஷனெரியான ஸ்பென்சர் ஹாச் மார்த்தாண்டம் பகுதி மக் களுக்கு தேனீக்களை வளர்க்கும் கலையைக் கற்றுக் கொடுத்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. தொடர்ந்து மார்த்தாண்டம் ஒய்எம்சிஏ தேனீக்களை வளர் க்கும் கலையை சிறு தொழில் பயிற்சியாக மக்களுக்கு அளித் துள்ளது. தற்போது இந்தியாவின் தேன் கிண்ணம் என சொல்லும் அளவிற்கு மார்த்தாண்டம் தேனுக்கு புகழ் பெற்றுத் திகழ்கிறது. தேன் உற்பத்தி மூலம் குமரி மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவதுடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான தேன் வர்த்தகமும் நடைபெறுகிறது.
    ரப்பர் தோட்டங்களே ஆதாரம் குமரி மாவட்டத்தில் தேன் உற்பத்திக்கு ரப்பர் தோட்டங்களை ஆதாரமாகத் திகழ்கின்றன. மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் இலையுதிர் காலங்களாகும். 
    இதில் பிப்ரவரி இறுதி யிலிருந்து மரங்களில் புதிய தளி ரிலைகள் துளிர்க்கத் தொடங்கும். இதில் இம்மரங்களில் மூன்று இலைகள் சேரும் தளிர்க் காம்புகளில், பூக்களில் சுரக்கும் குளுக்கோஸ் அல்லது நெக்டர் எனப்படும் போன்ற இனிப்புத் திரவத்தை உறிஞ்சி எடுத்து தங்களின் கூடுகளில் கொண்டு வந்து தேனாக மாற்றுகின்றன. 
    இதற்கான தேனீ வளர்ப்போர் ரப்பர் தோட்டங்களில் சுமார் 3 அடி உயர மரம் அல்லது இரும்பு கால்களைக் கொண்ட மரத்தினாலான தேன் கூடுகளை (பெட்டிகள்) அமைக்கின்றனர். 3 அடுக்குகளைக் கொண்ட இந்த கூடுகளில் தேனீக்கள் தேனடைகளை வைப்பதற்காக சதுர வடிவிலான மரச்சட்டங்கள் இருக்கும். இந்த மரச்சட்டங்களில் தேனீக்கள் தங்களின் சிறப்பு சுரப்பி மூலம் மெழுகைச் சுரந்து ஆயிரக்கணக்கான சிறு, சிறு அறைகளாக தேனடைகளை உருவாக்குகின்றன. பின்னர் அந்த அறைகளில் தேனை நிரப்புகின்றன.
    குமரியில் பிப்ரவரி இறுதியில் சீசன் தொடங்கும்: குமரி மாவட்டத்தில் பொதுவாக ரப்பர் மரங்களில் தளிரிலைகள் செழிப்பாக வளர்ந்து நிற்கும் பிப்ரவரி இறுதியில் தேன் சீசன் தொடங்கும். இந்நிலையில் தேன் சீசன் தொடங்கவிருப்பதையொட்டி தேனீ வளர்ப்போர் அதற்கான ஆயத்தப் பணிகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர். இதற்கான தேனீ கூடுகளை தினம் தோறும் பிரித்து அவற்றை செம்மைப்படுத்தி வரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதுகுறித்து குலசேகரம் தும்பகோடு பகுதியைச் சேர்ந்த முன்னோடி தேனீ வளர்ப்பாளர் தோமஸ் கூறியதாவது:
    தேனீக்களை வளர்க்கும் தொழில், அதிக பொறுமையும், அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு கலையாகும். தேன் கூடுகளில் தேனீ குடம்பங்களை வைப்பது, குடும்பங்களை பிரிப்பது, தேனடைகளை பராமரிப்பது, தேனீக்களுக்கு நோய்த் தாக்காமல் பாதுகாப்பது என பல்வேறு பணிகள் அதில் உள்ளன. 
    ஒரு ஆண்டில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான 3 மாதங்கள் மட்டுமே தேன் சீசன் காலங்களாகும். இந்த 3 மாதங்களுக்காக ஆண்டு முழு வதும் தேனீக்களை பாதுகாக்க வேண்டும். சீசன் இல்லாத காலங்களில் தேனீக்களுக்கு சர்க்கரைப் பாவை உணவாகக் கொடுத்து அவற்றை கூடுகளில் தக்க வைக்க வேண்டும். இதற்கு அதிக செலவு ஏற்படும். தற்போது தேன் உற்பத்திக்கான ஆயத்தப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம். ஒக்கிப் புயல் காரணமாக லட்சக் கணக்கான ரப்பர் மரங்கள் அழிந்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான தேனீ கூடுகளும் சேதமடைந்துள்ள. இதனால் தேன் உற்பத்தியில் கணிசமான அளவிற்கு பாதிப்பு ஏற்படும். எனினும் மரங்களில் ஈரத்தன்மை அதிகம் இருப்பதால் அதிக இலை அடர்த்தி ஏற்பட்டு சீசன் நன்றாக அமையும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
    கேரளாவில் முகாமிட்டுள்ள குமரி தேனீ வளர்ப்போர்: இந்தியாவில் அதிக அளவில் தேன் உற்பத்தி செய்யப்படும் மாநிலமாக கேரளம் உள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேன் உற்பத்தியில் பெருமளவில் ஈடுபடுவதும் குமரி மாவட்ட தேனீ வளர்ப்போர் ஆவர். பொதுவாக தேன் சீசன் குமரி மாவட்டத்தைவிட கேரளத்தில் முன்கூட்டியே தொடங்கும். அம்மாநிலத்தில் தற்போது தேன் சீசன் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான தேனீ வளர்ப்போரும், தொழிலா ளர்களும் அம்மாநிலத்தில் தேன் உற்பத்தியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    இதுகுறித்து கேரள மாநி லம் கண்ணூர் பகுதியில் முகா மிட்டுள்ள குமரி மாவட்ட கொட்டூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி தேனீ வளர்ப் பாளரான பி. ஹென்றி கூறிய தாவது:
    கேரள மாநிலத்தில் கண் ணூர், காசர்கோடு, பாலா, தொடுபுழா, நிலம்பூர், கோத மங்கலம், கோட்டயம், பத்த னம்திட்டை உள்ளிட்ட பகுதிகள் தேன் உற்பத்திக்கு உகந்த இடங்களாக உள்ளன. குமரி மாவட்டத்திலிருந்து தற்போது ஆயிரக்கணக்கானோர் இப்பகுதியில் முகாமிட் டுள்ளோம். தற்போது கேரளத்தில் சீசன் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு சில இடங்களில் தேனீக்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. எனினும் சீசன் நன்றாக அமையும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai