Enable Javscript for better performance
குமரி மாவட்டத்தில் திடீர் மழை: பெருஞ்சாணி அணையில் 58 மி.மீ. பதிவு- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் திடீர் மழை: பெருஞ்சாணி அணையில் 58 மி.மீ. பதிவு

    By DIN  |   Published on : 09th February 2018 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை மாலை  பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக பெருஞ்சாணி, மாம்பழத்துறையாறு, புத்தன் அணை ஆகிய இடங்களில் தலா 58 மிமீ., மழை பதிவாகியுள்ளது.
    குமரி மாவட்டத்தில், கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி ஒக்கி புயல் தாக்கியது. இதனால் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த  மழை பெய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2 மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தைப் போல் காணப்படும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை மாலை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டியது. இந்த மழை ஓரளவு வெப்பத்தை தணித்தது.
    அதிகபட்சமாக புத்தன் அணையில் 58.6 மி.மீ. மழை பதிவானது. மாம்பழத்துறையாறு, பெருஞ்சாணி அணைகளிலும் 58 மி.மீ. மழை பெய்திருந்தது. பிற பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): பேச்சிபபாறை 10, சிற்றாறு ஒன்று 18,2, சிற்றாறு இரண்டு 22.6, திற்பரப்பு 15.6, கன்னிமார் 38.3, நாகர்கோவில் 17.8, கோழிப்போர்விளை 17.5, அடையாமடை 48, குருந்தன்கோடு 8, ஆனைகிடங்கு 42 மிமீ.
    திடீர் மழையை தொடர்ந்து பெருஞ்சாணி அணை மூடப்பட்டது. தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 798 கனஅடியும், சிற்றாறு 1இல் இருந்து 125 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    நாகர்கோவில் நகரில், வியாழக்கிழமை  மாலையும் சிறிது நேரம் தூறலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai