Enable Javscript for better performance
குலசேகரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை

    By DIN  |   Published on : 09th February 2018 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குலசேகரம் அருகே அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் சுந்தரமணி (44) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    மணலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமணி. இவர் அரசுப் போக்குவரத்துக் கழக கன்னியாகுமரி பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். 
    இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை விஷம் குடித்த நிலையில் வீட்டில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை  அப்பகுதியிலுள்ளவர்கள் மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சுந்தரமணிக்கு குமாரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai