Enable Javscript for better performance
குழித்துறை அரசுப் பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: சமையலர் கைது- Dinamani

சுடச்சுட

    

    குழித்துறை அரசுப் பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: சமையலர் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழித்துறை அரசுப் பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்தியதாக விடுதி சமையலர் கைது செய்யப்பட்டார்.
    குழித்துறையில் அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து, அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த விடுதியில் பணியாளர்கள் சிலர் மாணவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனராம். 
    இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவர் அரசுப் பள்ளி வகுப்பறையில் இருந்தபோது உடலில் காயங்கள் இருந்ததை ஆசிரியர்கள், பிற மாணவர்கள் பார்த்துள்ளனர். மாணவரிடம் விசாரித்தபோது, தான் விடுதி சமையலர் மற்றும் உதவியாளரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், உடன்படாததால் அடித்து காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் அளிக்கப்பட்டது. 
    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி குமுதா மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் விடுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது விடுதியில் தங்கியிருந்த மேலும் பல மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குழித்துறை அரசு ஆதிதிராவிடர் விடுதி சமையல் பணியாளர் விஸ்வாம்பரன்(45),  சமையல் உதவியாளர் வில்சன்(52) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் உத்தரவிட்டார். மேலும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார் இவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி குமுதா கூறுகையில், பாதிப்புக்குள்ளான மாணவருக்கு வெள்ளிக்கிழமை (பிப். 9) மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. மேலும் அந்த விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவக் குழுவினர் வெள்ளிக்கிழமை (பிப்.9) கவுன்சிலிங் வழங்குகின்றனர் என்றார்.
    இந்நிலையில் விஸ்வாம்பரனை போலீஸார் தக்கலை பேருந்து நிலையத்தில் வைத்து வியாழக்கிழமை கைது செய்தனர். வில்சனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai