Enable Javscript for better performance
கொற்றிக்கோட்டில் பேருந்துக்கு காத்திருந்த பெண் பலாத்காரம்: 2 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொற்றிக்கோட்டில் பேருந்துக்கு காத்திருந்த பெண் பலாத்காரம்: 2 இளைஞர்கள் கைது

    By DIN  |   Published on : 09th February 2018 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொற்றிக்கோடு அருகே பேருந்துக்கு காத்திருந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்று பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
    கொற்றிக்கோடு அருகேயுள்ள சரல்விளை புதிய காலனியைச் சேர்ந்த 46 வயது பெண்,  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகிறார். இவர், அண்மையில் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கு கொற்றிக்கோடு கடை வீதிக்கு சென்றுவிட்டு,  இரவு 8 மணியளவில் ஊர் திரும்ப பேருந்துக்காக காத்திருந்தாராம்.
    அப்போது அந்த வழியாக அனிஷ் (21),  சம்பத் (24) ஆகியோர் பைக்கில் வந்தனராம். இவர்களில் அனிஷை அந்த பெண்ணுக்கு நன்கு தெரியும் என்பதால், அவருடன் அந்த பெண் பைக்கில் சென்றாராம். அவர்கள் ஊருக்கு அந்த பெண்ணை அழைத்து செல்லாமல், ஆளில்லாத இடத்துக்கு கடத்தி சென்று அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.  இதுகுறித்த புகாரின்பேரில் கொற்றிக்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து இளைஞர்களை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai