Enable Javscript for better performance
கொல்லங்கோடு அருகே மின்சாரம் பாய்ந்து  இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கொல்லங்கோடு அருகே துணி தேய்க்கும் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
    கொல்லங்கோடு அருகேயுள்ள தைவிளாகம் பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு மகன் பிரதீப் (19). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் புதன்கிழமை மாலையில் வீட்டில் தேய்ப்பு பெட்டி மூலம் துணிகளை தேய்த்துக் கொண்டிருந்தாராம். 
    அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை குடும்பத்தி
    னர் மீட்டு கொல்லங்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai