Enable Javscript for better performance
கொல்லங்கோடு அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கொல்லங்கோடு அருகே சுமை ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியில் தலைமை காவலர் செல்வராஜ் மோட்டார் சைக்கிள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக கேரளம் நோக்கி வந்த சுமை ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினார்.
    ஆனால் ஆட்டோ நிறுத்தாமல் சென்றதையடுத்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று கேரள மாநிலப் பகுதியான பொழியூர் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தார். தொடர்ந்து, ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து அவர் கொல்லங்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் அங்கு சென்று ரேஷன் அரிசியுடன் ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, ஆட்டோவுடன் நாகர்கோவிலில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai