Enable Javscript for better performance
நல்லூர் கோதேஸ்வரி குளத்து கரையில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    நல்லூர் கோதேஸ்வரி குளத்து கரையில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?

    By DIN  |   Published on : 09th February 2018 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நல்லூர் கோதேஸ்வரி குளத்தின் கரையில் தடுப்புச் சுவர் இல்லாததால் விபத்துக்கான அபாயம் நிலவுகிறறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
    நல்லூர் பேரூராட்சிக்குள்பட்ட கோதேஸ்வரி குளம் பொதுப்பணித் துறைற நீராதார அமைப்பின் கட்டுபாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறறது. இந்தக் குளத்தின்க ரையில் தடுப்புச் சுவர் கட்டப்பட வில்லை. இந்தக் குளத்தின் கரையில்தான் மார்த்தாண்டம்-வெட்டுவெந்தி இணைப்புச் சாலை உள்ளது. தற்போது மார்த்தாண்டத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் பெரும்பாலும் இவ்வழியாகத்தான் செல்கின்றன.
    குறிப்பாக இச்சாலையின் ஒரு பக்கம் கோதேஸ்வரிகோயில் மதில்சுவரும் , மறுமக்கம் ஒருதனியார் தோட்ட மதில் சுவரும் உள்ளது.வெட்டுவெந்நியிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி வரும்போது சாலையின் நேர் எதிரே சுமார்25 அடிபள்ளத்தில் கோதேஸ்வரி குளம் உள்ளது.
    இந்தக் குளத்தின்கரையில் தடுப்பு சுவர்கள் இல்லாததால் வேகமாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி நேரே குளத்திற்கு சென்று விழுந்து அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றறன. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
    எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தக் குளத்தின்கரையில் உடனே தடுப்புசுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai