Enable Javscript for better performance
நாகர்கோவிலில் தமிழ் இலக்கிய கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் தற்காலத் தமிழ் இலக்கியத் தளங்கள் என்ற பொருளில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
    பாரதி பைந்தமிழ் இயக்கமும், பேராசிரியர்  முனைவர் தா.துரைநீலகண்டன் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு, ஆசிரியர் ந.கிருஷ்ணன் தலைமை வகித்தார். துரைநீலகண்டன் முன்னிலை வகித்தார்.  அரசுக் கல்லூரி முதல்வர் பா.வேலம்மாள் ஆய்வுக்கோவை என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.  விவேகானந்தா கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சு.ஜெயகுமாரி அறிமுக உரையாற்றினார். 
    நாமக்கல் கல்லூரி பேராசிரியர் ப.இளங்கோ, சுரண்டை அரசு கல்லூரி  தமிழ் உயராய்வு மையத் தலைவர் மு.பரமார்த்தலிங்கம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நாகேஷ்வரி வரவேற்றார்.
    தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியைகள் தே.நாகலட்சுமி,  இரா.கலாஞானசெல்வம்,  வே.சசிரேகா,  பேராசிரியர் அழகேசன், ஆகியோர் கருத்தரங்க அமர்வுத் தலைவராக இருந்தனர். இதில் 37 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai