Enable Javscript for better performance
படந்தாலுமூடு அந்திச் சந்தை முன் ஆபத்தான நிலையில் மின்கம்பம்- Dinamani

சுடச்சுட

    

    படந்தாலுமூடு அந்திச் சந்தை முன் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு அந்திச் சந்தையின் முன் பகுதியில் ஆபத்தான நிலையில் நிற்கும் மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    படந்தாலுமூடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம், களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி அந்திச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு மீன், காய்கனிகள் வாங்க தினமும்  மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். வாரத்தில் இரண்டு நாள்கள் மாட்டுச் சந்தையும் செயல்பட்டு வருவதால்,  மாடுகள் வாங்க இம்மாவட்டம் மட்டுமன்றி கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
    இப்பகுதியில் உயர் அழுத்த மின்சாரம் செல்லும் இரும்பால் ஆன சுமார் 40 அடி உயர மின்கம்பத்தின் அடிப்பகுதி துருபிடித்து சேதமடைந்து காணப்படுகிறது. எந்த நேரத்திலும் கீழே சாயும் நிலையில் இந்த மின் கம்பம் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின் கம்பத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    இந்த மின்கம்பத்தில் உள்ள சோடியம் விளக்குகள் பழுதானால், மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்க முடியாத நிலை உள்ளது.
    எனவே,  ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு,  அப்பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai