Enable Javscript for better performance
மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குழித்துறையிலிருந்து மார்த்தாண்டம் வரை போக்குவரத்தை செம்மைப்படுத்திட வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மார்த்தாண்டத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். குளச்சல் தொகுதி  எம்.எல்.ஏ. பிரின்ஸ் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆஸ்கர்பிரடி, மாவட்ட ஐஎன்டியூசி தலைவர் அனந்தகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலர் ஸ்டூவர்ட், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் வினு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai