Enable Javscript for better performance
மார்த்தாண்டத்தில் பிப்.21இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மார்த்தாண்டத்தில் பிப்.21இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்த்தாண்டத்தில் பிப். 21ஆம் தேதி சிறறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறற உள்ளது.
    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்துவ கல்லூரியும் இணைந்து, கல்லூரி வளாகத்தில் நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
    இம்முகாமில் 50- க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆள்தேர்வு செய்கின்றறனர். 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க இணையதள முகவரியில் பெயர் பதிவு செய்யலாம் அல்லது முகாம் நாளில் காலை 10 மணி முதல் நேரிலும் பதிவு செய்யலாம்.
    மேலும், வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் நாகர்கோவில், கோணத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மின்னஞ்சலில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04562-261191, 8012172783 ஆகிய தொலைத் தொடர்பு எண்களில் பேசி தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai