Enable Javscript for better performance
வேளாண்மைத்துறை பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேளாண்மைத்துறை பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில்  பணித்தேர்வு முகமைகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து,  மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மைத் துறையில் தேசிய மின் மேலாண்மை திட்டம் 2017-18 தொடர்பான பணிகளை செயல்படுத்த வட்டார அளவில் தகவல் பதிவு இயக்குபவர் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பதவிக்கு  2 காலியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில்  நிரப்பப்பட உள்ளன. 
    இப்பணியிடங்களில் தாற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை தேர்வு செய்து பணி அமர்த்துவதற்காக பணித் தேர்வு முகமை  (பிளேஸ்மென்ட் ஏஜென்சி) மூலமாக பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தப் பணியாளர்களை ஒப்பந்த முறையில் பணி அமர்த்துவதில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பணித்தேர்வு முகமைகள் தங்கள் சுய அடிப்படை விவரங்களை உரிய ஆவணங்களுடன் பிப். 21ஆம் தேதி மாலை  5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பங்களை வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  நாகர்கோவில் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai