Enable Javscript for better performance
கருங்கல் அருகே வீடு புகுந்து பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே முள்ளங்கனாவிளை பகுதியில் வீடு புகுந்து பணம் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    முள்ளங்கனாவிளை மருதவிளை பகுதியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மனைவி மேரிபாய் (48). இவரது கணவர் வெளியூரில் வேலைசெய்து வருகிறார். இவர் தனது மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு மர்ம நபர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.1500-ஐ திருடிவிட்டு, நகைகளை திருட முயன்றாராம். அப்போது மேரிபாய் எழுந்து கூச்சலிட்டாராம். இதையடுத்து மர்ம நபர் தப்பிவிட்டாராம்.
    இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai