Enable Javscript for better performance
கோவளம் துறைமுகத்துக்கு ஆதரவாக ஆட்சியரிடம் பெண்கள் மனு- Dinamani

சுடச்சுட

    

    கோவளம் துறைமுகத்துக்கு ஆதரவாக ஆட்சியரிடம் பெண்கள் மனு

    By DIN  |   Published on : 24th March 2018 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவளத்தில் வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மீனவப் பெண்கள் மனு அளித்தனர்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழமணக்குடி - கோவளத்துக்கு இடையே வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    இந்நிலையில், ஜெரோம், பிரியா, சுதா ஆகியோர் தலைமையில் கீழமணக்குடி, கோடிமுனை, குளச்சல், புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: கீழமணக்குடி -கோவளம் இடையே துறைமுகம் அமைவதால் எங்கள் பகுதி மேலும் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம். இங்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தர வேண்டும். துறைமுகம் சார்ந்த பணிகளில் எங்களது ஊருக்கு முன்னுரிமை தர வேண்டும்.
    எங்களுக்கு மீன்பிடித் தொழில் செய்ய வசதியாக சிறிய அளவில் மீன்பிடித்துறைமுகம் மற்றும் வறுமையில் வாடும் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வாங்கிட நிதியுதவி பெற்றுத்தர வேண்டும். மேலும், மீனவ பெண்கள் சுய உதவிக் குழுவினர் சுயமாக தொழில் செய்ய வழிவகை செய்திட வேண்டும். துறைமுகப் பணிகளில் படித்த மீனவ இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai