Enable Javscript for better performance
தக்கலை, களியக்காவிளையில் ராம ராஜ்ஜிய ரதத்துக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தக்கலை, களியக்காவிளையில் ராம ராஜ்ஜிய ரதத்துக்கு வரவேற்பு

    By DIN  |   Published on : 24th March 2018 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தக்கலைக்கு வந்த ராம ராஜ்ஜிய ரதத்துக்கு இந்து அமைப்பினர் வண்ண மலர்கள் தூவியும், பெண்கள் தட்டுகளில் கனி வர்க்கங்கள், இனிப்புகள் வைத்தும் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தனர்.
    இந்து அமைப்பினர் ரதத்துக்கு முன்பாக இருசக்கர வாகனங்களில் காவி கொடி ஏந்தியவாறு அணிவகுத்து வந்தனர். தக்கலை காமராஜர் பேருந்து நிலையம் முன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் ப.ரமேஷ் தலைமையில் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரதத்தில் இருந்த ராமருக்கு, சுவாமி சாந்த ஆனந்த மகரிஷி பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
    இதில், மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், பொதுச் செயலர் தங்கப்பன், செயலர்கள் உண்ணிகிருஷ்ணன், கீதா, நகரத் தலைவர் ஸ்ரீகுமார், மாவட்ட துணைத் தலைவர் சுப்புலட்சுமி, மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ஜோதீந்திரன், மாவட்டச் செயலர் பிரதீப், பாஜக நகர பொதுச் செயலர்கள் பாபு, கோபகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மத்திய அரசு வழக்குரைஞர் வேலுதாஸ், இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    களியக்காவிளையில்...
    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற ராம ராஜ்ஜிய ரத ஊர்வலத்துக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளையில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    வியாழக்கிழமை ஆரல்வாய்மொழி வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த இந்த ஊர்வலம், வெள்ளிக்கிழமை நாகர்கோவிலிலிருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டது.
    ஊர்வலம், வில்லுக்குறி, தக்கலை, காட்டாத்துறை, மார்த்தாண்டம், மேல்புறம், குழித்துறை வழியாக களியக்காவிளை வந்தது. ரதத்தின் முன்னால் நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் ஊர்வலமாக வந்தனர்.
    களியக்காவிளையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ரதத்துக்கு மலர் தூவி வரவேற்பளித்தனர்.
    நிகழ்ச்சிக்கு இந்து கோயில் கூட்டமைப்பு மாவட்டச் செயலர் எஸ். ஜோதிலிங்கராஜ் தலைமை வகித்தார். விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் ஆர். குமரேசதாஸ், முன்சிறை ஒன்றியத் தலைவர் டி. செல்வராஜ், ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலர் டி. ரகு, முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், பாஜக மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி, மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், கேரள மாநிலம் இந்து ஐக்கியவேதி தலைவர் சிவசங்கரபிள்ளை, கேரள மாநில பாஜக பொதுக்குழு உறுப்பினர்கள் அசோக்குமார், பாலச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஊர்வல பொறுப்பை தமிழக நிர்வாகிகள் கேரள நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து ரத ஊர்வலம் கேரளத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
    ரத ஊர்வலத்தையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai