Enable Javscript for better performance
நித்திரவிளை அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    நித்திரவிளை அருகே தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியர் சி. ராஜசேகர் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் கே. முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர், நித்திரவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்பிடிக்கப்பட்டது.
    அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai