Enable Javscript for better performance
வாவுபலி கண்காட்சி திடலில் மார்ச் 27இல் சட்ட சேவை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வாவுபலி கண்காட்சி திடலில் மார்ச் 27இல் சட்ட சேவை முகாம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழித்துறையில் உள்ள வாவுபலி கண்காட்சி திடலில் புதிய வடிவிலான சட்ட சேவை முகாம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 27) நடைபெறுகிறது.
    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழித்துறையில் வாவுபலி கண்காட்சி திடலில் மார்ச் 27ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய வடிவிலான சட்ட சேவை முகாம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
    இம்முகாமில் அனைத்து அரசு துறையினரும் தங்களது துறையிலுள்ள நலத்திட்டங்களை பற்றி விவரிக்கவும், நலத் திட்டங்களை அங்காடிகள் மூலம் காட்சிப்படுத்தவும் உள்ளனர்.
    முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட அரசு துறையில் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கவும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் தெளிவாக அறிந்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai