Enable Javscript for better performance
இன்று நள்ளிரவு  ஈஸ்டர் பெருவிழா திருப்பலி- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு ஈஸ்டர் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
    கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையிலும், குழித்துறை மறைமாவட்டம் திரித்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயத்தில் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் தலைமையிலும் திருப்பலி நடைபெறுகிறது.
    மார்த்தாண்டம் மறைமாவட்டத்தில் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் மார்த்தாண்டம் வடக்குத் தெரு, கிறிஸ்து ராஜா ஆலயத்திலும்,  தக்கலை மறைமாவட்டத்தில் படந்தாலுமூடு திருஇருதய ஆலயத்தில் ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையிலும் திருப்பலி நடைபெறுகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் இத்திருப்பலியின் போது இறைமக்கள் தங்கள் கைகளில் எரியும் மெழுகுவர்த்தியை ஏந்தி பங்கேற்கின்றனர். மேலும், ஆலயங்களில் திருமுழுக்கு வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 
    மேலும், தென்னிந்திய திருச்சபைக்கு உள்பட்ட ஆலயங்கள் மற்றும் இரட்சணிய சேனை, லண்டன் மிஷன், லுத்தரன் மிஷன், மார்-தோமா உள்ளிட்ட ஆலயங்களிலும் அதிகாலை ஆராதனைகள் நடைபெறுகின்றன. பெந்தெகொஸ்தே ஜெபவீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி தொடர்ந்து ஆராதனைகள், பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
    ஊருக்கு திரும்பிய தொழிலாளர்கள்:  ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், குமரி மாவட்டத்திலிருந்து கேரளம் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஊர்திரும்பியுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai